Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கார்த்திகை பிறந்தது உனக்காக காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண – வீரமணிதாசன் பாடிய ஐயப்பன் பாடல் வரிகள். Kaarthigai Piranthathu Unakkaka – Song on Lord Ayyappa by Veermanidasan from Album Irumudi – songs Tamil Lyrics

============

கார்த்திகை பிறந்தது உனக்காக

நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண

கார்த்திகை பிறந்தது உனக்காக

நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2)

மணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து

வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என்

இருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது)

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

பூமரத்து நிழல் பார்த்து

ஓய்வாக நான் சாய்ந்தேன்

அட்டா அதுவோ இலையுதிர் காலம்

வானத்து குடை கீழே

பசும்புல்லின் பாய் மேலே

படுத்தேன் அதுவோ

அடை மழைக் காலம்

துரும்பானேன் புயல்காலம்

துளிர்விட்டேன் வெயில்காலம்

இறைவா உன் துணை வேண்டும்

கைகூடும் கார்காலம்

இருமுடி சுமந்து நடந்திடுவேன்

பெருவழிப் பாதை கடந்திடுவேன்

பரம்பொருள் உன்னை நாடிடுவேன்

வரும் துயர் யாவும் தீர்த்திடுவேன் (கார்த்திகை பிறந்தது)

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

இல்லாத வறியோர்க்கு பொருள் அள்ளித்தருகின்ற

நல்லோர் வாழ்ந்தது கரிகாலம்

இருக்கின்ற உயிருக்கு விலை பேசித் திரிகின்ற

வஞ்சகர் நடைபோடும் கலிகாலம்

பணமிருந்தால் நிகழ்காலம்

பகை வந்தால் போர்க்காலம்

ஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்

பணமிருந்தால் நிகழ்காலம்

பகை வந்தால் போர்க்காலம்

ஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்

சரணம் சொல்லி பாடிடுவேன்

சபரிமலைதனில் ஏறிடுவேன்

பதினெட்டு படியில் தவம் கிடப்பேன்

தரிசனம் கண்டே திரும்பிடுவேன் (கார்த்திகை பிறந்தது)

Kaarthigai Piranthathu Unakkaka Ayyappa song lyrics in Tamil : The above lyrics – Kaarthigai Piranthathu Unakkaka song on Lord Ayyappa by Veermanidasan from Album Irumudi. Tamil Devotional Ayyappan Song Video Sung and Performed by Veeramanidaasan from the Album Irumudi produced by Unique Recording.

இந்த கார்த்திகை பிறந்தது உனக்காக | kaarthigai piranthathu unakkaka பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Veeramanidaasan Ayyappan Songs கார்த்திகை பிறந்தது உனக்காக கார்த்திகை பிறந்தது உனக்காக போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment