Harihara Sudhane Anandha Roopa Saranam Ayyappa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா!- ஐயப்பன் பாடல் வரிகள். Harihara Sudhane Anandha Roopa Saranam Ayyappa – Ayyappan Devotional songs Tamil Lyrics

சரணம் ஐயப்பா சுவாமி

சரணம் ஐயப்பா!

வரணும் ஐயப்பா இப்போ

வரணும் ஐயப்பா!

============

ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா

சரணம் ஐயப்பா!

சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா

சரணம் ஐயப்பா!

எருமேலி வாசா ஏழை பங்காளா

சரணம் ஐயப்பா!

கரிமேலி சாஸ்தா கலியுக வரதா

சரணம் ஐயப்பா!

காடும் மேடும் நடந்து வந்தோம்

சரணம் ஐயப்பா!

கல்லும் முள்ளும் கடந்து வந்தோம்

சரணம் ஐயப்பா!

கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய்

சரணம் ஐயப்பா!

கனியின் சுவையாய் நீயே வருவாய்

சரணம் ஐயப்பா!

புலியின் பாலைக் கொண்டு வந்தாயே

சரணம் ஐயப்பா!

எங்கள் கிலியினை நீக்கி அருளிடு வாயே

சரணம் ஐயப்பா!

இருமுடி தாங்கி வந்தோம் அப்பா

சரணம் ஐயப்பா!

இருவினை அழித்து அருள் புரிவாயே

சரணம் ஐயப்பா!

நெய் அபிஷேகம் ஏற்றுக் கொள்வாயே

சரணம் ஐயப்பா!

நிலையாய் நெஞ்சில் குடியிருப்பாயே

சரணம் ஐயப்பா!

வேண்டும் யாவும் கொடுத்திடு வாயே

சரணம் ஐயப்பா!

எதும் வேண்டாத உள்ளம் தந்திடுவாயே சரணம் ஐயப்பா!

பக்தரின் குறைகள் தீர்த்திடுவாயே

சரணம் ஐயப்பா!

குறையே இல்லா பக்தியைத் தருவாய்

சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா சுவாமி

சரணம் ஐயப்பா!

வரணும் ஐயப்பா இப்போ

வரணும் ஐயப்பா!

இந்த | harihara sudhane anandha roopa saranam ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment