Karuppa Saamy Songs இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அழகுக் கருப்பன் வாரார் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அழகுக் கருப்பன் வாரார் – நம்ம பதினெட்டாம் படியோன் வாரார் கருப்பசாமி பாடல் வரிகள். Azhagu Karuppasamy Varaar- Karuppasami Devotional songs Tamil Lyrics

============

அய்யன் வாரார்

மெய்யன் வாரார்

அழகர்மலை விட்டிறங்கி

அழகுக் கருப்பன் வாரார் – நம்ம

பதினெட்டாம் படியோன் வாரார்

பட்டாடை பளபளக்க

பவளமணி கிலுகிலுக்க

வெட்டரிவாள் வீச்சோடு

வேகமாக இங்கே வாரார் – நம்ம

தட்டட்டி கருப்பன் வாரார்

சிறப்பான முட்செருப்பு

சிரிக்கின்ற கலகலப்பு

பறக்கின்ற குதிரையோடு

பாசமுடன் இங்கே வாரார் – நம்ம

குறட்டிக் கருப்பன் வாரார்

ஓங்கிய சவுக்கோடு

உருளுகின்ற வழியோடு

தீங்கான விடம்போக்க

திட்டாணி மன்னன் வாரார் – நம்ம

ராங்கியம் கருப்பன் வாரார்

பாட்டு முழங்கிடவே

பாற்சோறு மணந்திடவே

கேட்டதைக் கொடுப்பதற்கே

கீழிறங்கி இங்கே வாரார் -நம்ம

கோட்டூருக் கருப்பன் வாரார்

பித்தலாட்டப் பேய்களையும்

பில்லி சூன்யத்தை

கொத்தாக வேரறுத்து

குலம்காக்க இங்கே வாரார் – நம்ம

கொத்தரிக் கருப்பர் வாரார்

தலையினிலே கிரீடமுடன்

தாள்களிலே சலங்கையுடன்

குலவை முழக்கமுடன்

குதித்தாடி இங்கே வாரார் – நம்ம

இளங்குடிக் கருப்பன் வாரார்

சாம்பிராணி கமகமக்க

ஜவ்வாது மணமணக்க

தேம்பலைத் துடைப்பதற்கே

தொலையானூர் அய்யன் வாரார் – நம்ம

முலங்குடி கருப்பன் வாரார்

கத்துகின்ற கடலாக

கரைகாண அன்புடனே

நித்தம் நம்மைக் காப்பதற்கே

நேசமுடன் இங்கே வாரார் – நம்ம

கொத்தங்காட்டு கருப்பன் வாரார்

சுக்குமாந் தடியேந்தி

துடிக்கின்ற மீசையோடு

மக்களைக் காத்திடவே

மன்னவனாய் இங்கே வாரார் – நம்ம

வையக் கருப்பன் வாரார்

அந்திசந்தி நேரத்திலும்

ஆபத்து நேரயிலும்

வந்திங்கே காத்திடவே

மஞ்சனத்தி அழகன் வாரார் – நம்ம

மருதங்குடிக் கருப்பன் வாரார்

நோய்விரட்டி பேய்விரட்டி

தாய்போலச் சேய்காக்க

மாயவனின் தூயவனும்

வாழ்வளிக்க இங்கே வாரார் – நம்ம

நெய்வாச கருப்பன் வாரார்.

இந்த | azhagu karuppasamy varaar பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs அழகுக் கருப்பன் வாரார் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment