Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Swamiye Arul Seiyappa Swamiye – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே

வெற்றிக் கருளும் சபரிமலைக்கு

விரதம் இருந்தால் வெற்றி கிடைக்கும்

சற்று மறந்து தன்னை உணர்ந்தால்

சத்திய‌ முரசம் சுற்றி முழக்கும் (ஐயப்ப)

மாலையணிந்து ஆலயம் வந்தால்

பால்முகம்போல் வாழ்வும் மணக்கும்

குத்தும் கல்லும் கூரிய‌ முள்ளும்

மெத்தையாக்கும் மெய்யருள் சேர்க்கும் (ஐயப்ப)

பம்பையாற்றில் ஆடிப் பணிந்தால்

பாற்கடல் வாசன் ஆற்றல் பிறக்கும் (ஐயப்ப)

உள்ள‌ விளக்கம் உணமை விளக்கம்

ஒளியின் விளக்கம் மகர‌ விளக்கே (ஐயப்ப)

மண்டல‌ விரதம் மணிகண்டன் விரதம்

தொண்டர்கள் விரதம் திருவடிச் சரணம்

சித்தம் விளைந்தால் சித்தி கிடைக்கும்

பக்தி விளைந்தால் முக்தி கிடைக்கும் (ஐயப்ப)

நெய்யபிஷேகம் சாமிக்கே

ஐயனின் கருணை பூமிக்கே (ஐயப்ப)

பதினெட்டம் திருப்படி தொட்டு

பதிமுகம் காண‌ நடைகட்டு

இருமுடி கட்டு திருவடி காண‌

ஏற்றவர் போற்றும் ஜோதிமலைக்கே (ஐயப்ப)

பொற்பத‌ மேடை அற்புத‌ மேடை

நற்பத‌ மேடை நாயகன் மேடை

சங்கம் வந்தால் சாந்தி கிடைக்கும்

சக்தி கிடைத்தால் சரணம் கிடைக்கும்

சபரிக்கு வந்தால் மோட்சம் கிடைக்கும்

சற்குரு நாதன் காட்சி கிடைக்கும் (ஐயப்ப)

இந்த ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே | ayyappa swamiye arul seiyappa saamiye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment