Varahi Amman Stuthi in Tamil | Varahi Amman Thuthi Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ வாராஹி அம்மன் துதி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி
வாராஹீ நமோஸ்துதே!
============
வாராஹி தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
============
மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
============
ஸ்ரீ வாராஹி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
============
வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்
கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.
‘பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர். மேலும், யோகேஸ்வரி என்ற தெய்வத்தையும் சேர்த்து அஷ்டமாதர் என்றும் சொல்வதுண்டு.
சப்த மாதர்களான ஏழு கன்னியரின் உருவங்களை ஒரே கல்லில் வடித்திருப்பார்கள். பழைமை வாய்ந்த சிவாலயங்களில் இது ஒரு பரிவார சந்நிதி. பெரும்பாலும் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வடக்கு நோக்கியவாறு சப்த மாதர்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். முற்காலத்தில் இவர்களைப் புடைப்புச் சிற்பங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். நாளடைவில் தனித்தனி திருமேனிகளாக வடிக்கத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் காவலாக வீரபத்திரர் மற்றும் விநாயகரின் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்திருப்பதை தரிசிக்கலாம்.
வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹிதேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வாராஹி தேவி!
இந்த ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | varahi amman thuthi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Varahi Amman Songs, வராஹி அம்மன் பாடல்கள் ஸ்ரீ வாராஹி அம்மன் துதி ஸ்ரீ வாராஹி அம்மன் துதி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…