Alayam Endraal Alayam adhuthaan periyapalayam Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆலயம் என்றால் பெரிய பாளையம்! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஆலயம் என்றால் ஆலயம் அது தான் பெரிய பாளையம்!: சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன் . இசை: MSV. படம்: தேவி தரிசனம். Alayam Endraal Alayam adhuthaan periyapalayam, Sung By: Seerkazhi Govindarajan – Amman Devotional Song Lyrics Tamil.
============
ஆலயம் என்றால் ஆலயம்
அது தான் பெரிய பாளையம்!
காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்!
(ஆலயம் என்றால் ஆலயம்)
சாலை வழியே தனியே சென்றால்
தானும் வருவாள் பவானியே!
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே!
காலையில் மஞ்சள் நீரில் முழுகி
காரிகை மார்கள் கூடுகின்றார்
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்
காளி திரிசூலி…
நீலி ஜகன்மாதா…
தேவி பராசக்தி…
ஓங்காரி பவானி…
(ஆலயம் என்றால் ஆலயம்)
தாலியைக் காட்டி வேலியை நினைந்து
தன்னை மறந்தே ஆடுகின்றார்!
தர்மம் என்பதைக் காணாதவர்கள்
சந்நிதி முழுதும் தேடுகின்றார்!
பாளையத்தம்மா இருப்பதை மறந்து
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்!
பட்டப் பகலில் கண்களை இழந்து
பாதையை மாற்றி ஓடுகின்றார்!
தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்!
தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லித்
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்!
(ஆலயம் என்றால் ஆலயம்)
இந்த | alayam endraal alayam adhuthaan periyapalayam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs ஆலயம் என்றால் பெரிய பாளையம்! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…