Thiruvilakke thiruvilakke Devi Parashakti Thiruvilakke இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம் திருவிளக்கு பூஜை பாடல் வரிகள். Thiruvilakke thiruvilakke Devi Parashakti Thiruvilakke, Thiruvilakku Poojai Song Lyrics Tamil
============
திருவிளக்கு பஜனை – Thiruvilakku Bhajanai song
திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்
இருளை அகற்றும் திருவிளக்கே
இன்பம் அளிக்கும் திருவிளக்கே
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்
மங்கள ஜோதியாம் திருவிளக்கே
மாலையில் ஒளி தரும் திருவிளக்கே .
காலையில் ஒளிதரும் திருவிளக்கே
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்
திருமகள் வடிவே திருவிளக்கே
பணியும் திருவிளக்கே
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே
சாரதே உனக்கு நமஸ்காரம்
அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே
ஆலய பூஷணி திருவிளக்கே
ஆதிபராசக்தி நமஸ்காரம்
பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே
பக்தியை அளித்திடும் திருவிளக்கே
பதவியைத் தந்திடும் திருவிளக்கே
பவானி உனக்கு நமஸ்காரம்
ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே
அழகை அளிக்கும் திருவிளக்கே
அம்மா உனக்கு நமஸ்காரம்
சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே
சந்தான பலம்தரும் திருவிளக்கே
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே
சக்தியே உனக்கு நமஸ்காரம்.
இந்த திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே | thiruvilakke thiruvilakke devi parashakti thiruvilakke பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள், Thiruvilakku Poojai, திருவிளக்கு பூஜை, Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள் திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…