Shri Durgai Amman 108 Potri Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ துர்க்கை அம்மன் 108 சரண மாலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஸ்ரீ துர்க்கை 108 சரணமாலை மந்திரம். Shri Durgai Amman 108 Potri Lyrics – Tamil Lyrics
ஸ்ரீ துர்க்கை 108 சரணமாலை காலை,மாலை வடக்கு திசை நோக்கி அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம்.முக்கிய வேளை,பயணம் செய்யும் வேளை ,உடல்நிலை சீர்இல்லாத வேளையில் இப்பதிகமதை பக்தி சிரத்தையுடன் வேண்ட,எண்ணிய காரியம் வெற்றியடையும் என்பது மிக மிக உறுதி.
============
ஸ்ரீ துர்க்கை 108 சரணமாலை
ஓம் அன்னையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அன்பின் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அற்புத சக்தியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அரசாளவைத்திடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அகிலாண்ட நாயகியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அண்டனோரைக் காத்திடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அழகின் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அல்லல் நீக்கிடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அணுவுக்குள் அணுவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அஷ்டபுஜ நாயகியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அதர்மம் அழித்திடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அங்காள வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அசுரனை அழித்தவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அண்டமெல்லாம் நிறைந்தவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அச்சம் நீக்குபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அன்பின் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அங்கார தோஷம் நீக்குபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆபத்தில் காப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆறுமுகன் அன்னையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆசை அழித்திடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆழ்கடல் முத்தே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆனந்த ரூபமே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆணவம் நீக்கிடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆதியந்தம் அற்றவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆதிமூலமே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஆறுதல் தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் இல்லற சுகம் தந்திடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் இன்சொல் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் இரக்க உணர்வே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஈடில்லா அன்னையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஈடு இணையற்றவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஈசன் துணைவியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் உண்மையின் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் உற்ற துணை ஆனவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் உள்ளொளியாய் நிற்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் உலகளந்தவன் சகோதரியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மக்கள்குறை தீர்ப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் எல்லாம்,எங்கும்,எதிலும் நீயே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஏற்றம்மிகு வாழ்வு தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஏழைக்கிரங்கும் தெய்வமே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஏழ்மை அகற்றிடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஐஸ்வர்யம் தந்திடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஐய்யப்பன் அன்னையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஒற்றுமை வளர்ப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் எனும்பிரணவமே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஓடிவந்து காப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் தீபஜோதியில் நிற்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் தீவினை அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கருணையின் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கற்பகவல்லியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் காருண்ய வதியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் காலனை வென்றவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் காமாக்ஷி தாயே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கோள்வினை நீக்கிடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கோலவிழித் தாயே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கணபதி அன்னையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மெய் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மேன்மை தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கொடும் பிணி தீர்ப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கொண்டபகை அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மாரியாய் நின்றவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மாரியை தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மகிஷி வதம் செய்தவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மாந்திரீகம் அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மாயை அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மாசற்ற ஜோதியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் பாண்டியன் புதல்வியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் வானளாவி நிற்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் பைரவன் அன்னையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் திரிசூலம் கொண்டவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மங்கள வாரம் மகிழ்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சர்ப்பதோஷம் அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் குற்றம் பொறுப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் குலமது காப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் வேதத்தின் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஊழ்வினை அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் செய்வினை களைபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் கலைமகள் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அலைமகள் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மலைமகள் வடிவே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் ஞானம் தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் துன்பம் நீக்கிடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சலனம் நீக்கிடும் ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் பெரிய நாயகியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சினம் அழிப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சீர்மிகு வாழ்வு தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மருவூர் அரசியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் வற்றாத செல்வம் தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சர்ப வடிவம்மானவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் திருவிளக்கில் நிற்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் விதி சதி நீக்குபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சத்தியமாய் இருப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் நவரத்தினமாய் திகழ்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் அகஇருள் நீக்குபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் காலமதை கடந்தவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் நம்பினோரை காப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் பிள்ளைவரம் தருபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் எமபயம் நீக்குபவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் நித்திய பௌர்ணமியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சமயபுர நாயகியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் வேற்காடு கருமாரியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் உடைவாள் கொண்டவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் தர்மம் காப்பவளே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சிவசக்தி ஐக்கியமே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் மகிஷாசுரமர்த்தினியே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் சிவதுர்க்கையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் விஷ்ணு துர்க்கையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
ஓம் பிரமம் துர்க்கையே ஸ்ரீ துர்க்கா சரணம் !
இந்த | shri durgai amman 108 potri lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், 108 போற்றிகள் ஸ்ரீ துர்க்கை அம்மன் 108 சரண மாலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…