Gopiyare Gopiyare lyrics in tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கோபியரே கோபியரே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே! பாடல் வரிகள்

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!

கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!

ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!

கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!

பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!

மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!

கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!

தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்

நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!

கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!

கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

இந்த | gopiyare gopiyare lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள் கோபியரே கோபியரே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment