Saraswathi 108 potri tamil
சரஸ்வதி தேவியை வணங்க இந்த 108 சரஸ்வதி போற்றியை (Saraswathi 108 potri) இங்கு பதிவிட்டுள்ளோம்…
சரஸ்வதி காயத்ரி மந்திரம்
ஓம் வாக் தேவ்யை சவித்மஹே
தந்நோ வாணி ப்ரசோதயாத்
பிரம்ம பத்னியை சதீமஹி
நம் குழந்தைகள் அறிவுடன் திகழ கல்வியில் சிறக்க ஸ்ரீ சரஸ்வதியை வணங்கி பயன் பெறுவோம்.
சரஸ்வதி தேவி 108 போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி
ஓம் அண்டினோர்க்கு எளியவளே போற்றி
ஓம் அநுபூதி அருள்பவளே போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கரியவளே போற்றி
ஓம் அன்னவாகினியே போற்றி
ஓம் அகிலலோக குருவே போற்றி
ஓம் நன்மை அருள்பவளே போற்றி
ஓம் ஆசானாய்க் அருகிலிருப்பவளே போற்றி
ஓம் ஆனந்த ரூபியே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் வல்லமை இறைவியே போற்றி
ஓம் இகபரசுகம் அளிப்பவளே போற்றி
ஓம் ஈடு இணை இல்லாதவளே போற்றி
ஓம் நல்லெண்ணங்களை ஈடேற்றுபவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உயர்திரு தேவியே போற்றி
ஓம் உய்யும் வழியே போற்றி
ஓம் உயர்வளிப்பவளே போற்றி
ஓம் ஏடுஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவே போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர் தலைவியே போற்றி
ஓம் கல்விப் பொருளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் கலைவாணியே போற்றி
ஓம் கலையரசியே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரி தேவியே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் குணவதியே போற்றி
ஓம் நற்குண அரசியே போற்றி
ஓம் வம்புவழக்கின்றி காப்பவளே போற்றி
ஓம் சச்சிதானந்தமே போற்றி
ஓம் சாந்த ரூபியே போற்றி
ஓம் சான்றோன் ஆக்குபவளே போற்றி
ஓம் சித்தர் குருவே போற்றி
ஓம் சர்வ சித்தி அளிப்பவளே போற்றி
ஓம் சுருதி வடிவே போற்றி
ஓம் சுத்த சிவஞானியே போற்றி
ஓம் ஞானவிஞ்ஞான உருவே போற்றி
ஓம் ஞானப்பிழம்பே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞாலக்காவலே போற்றி
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞானாசிரியையே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை அளிப்பவளே போற்றி
ஓம் தஞ்சமே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தாயே போற்றி
ஓம் துதிக்கப்படுபவளே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறிக் காவலே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நாவுக்கரசியே போற்றி
ஓம் நாடப்படுபவளே போற்றி
ஓம் நற்கதி அளிப்பவளே போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாத விந்துவே போற்றி
ஓம் நாத வெள்ளமே போற்றி
ஓம் மலடு நீக்குபவளே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நித்தம் நினைக்கப்படுபவளே போற்றி
ஓம் நிறைவளிப்பவளே போற்றி
ஓம் குலம் காப்பவளே போற்றி
ஓம் குலக்கொழுந்தே போற்றி
ஓம் அறம்பொருள் இன்பமே போற்றி
ஓம் பாடற்பொருளே போற்றி
ஓம் பிரணவப்பொருளே போற்றி
ஓம் பிரம ஞானியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் பூரணியே போற்றி
ஓம் புவனநாயகியே போற்றி
ஓம் பிறப்பழிய அருள்பவளே போற்றி
ஓம் மணவாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மகேஸ்வரியே போற்றி
ஓம் மங்கள வடிவே போற்றி
ஓம் அகிலாண்ட அன்னையே போற்றி
ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் மந்திர உபதேசி போற்றி
ஓம் மாமுனியே போற்றி
ஓம் மாயை அழிப்பவளே போற்றி
ஓம் முற்றறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூல மந்திரமே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதை ஆக்குபவளே போற்றி
ஓம் மேன்மை அளிப்பவளே போற்றி
ஓம் யக்னேஸ்வரியே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் வழித்துணையே போற்றி
ஓம் வரம் அளிப்பவளே போற்றி
ஓம் வாணியே போற்றி
ஓம் வாகீஸ்வரியே போற்றி
ஓம் வித்தகியே போற்றி
ஓம் வித்தகன் ஆக்குபவளே போற்றி
ஓம் வெண்மைப் பிரியையே போற்றி
ஓம் வெண்தாமரை வல்லியே போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வேற்றுமை அழிப்பவளே போற்றி
ஓம் சரஸ்வதி தேவியே போற்றி
ஓம் சர்வேஸ்வரியே போற்றி
குழந்தைகள் கல்வி செல்வத்துடன் விளங்க சரஸ்வதி தேவியை வணங்குதல் வேண்டும் .அறிவுக்கு அதிபதி சரஸ்வதி.படிப்பு மட்டுமில்லாமல் ஆடல்,பாடல் போன்ற கலைகளை திறம்பட கற்க அன்னை சரஸ்வதியின் அருள் தேவை.அஷ்டலக்ஷ்மிகளின் அருள் இருந்தாலும் சரஸ்வதியின் அறிவு செல்வம் இல்லை என்றால் அது பயனில்லை.நவராத்திரியில் சரஸ்வதி பூஜையை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம்.சரஸ்வதியின் நாமங்களையும்,பாடல்களையும்,சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றிகளை சொல்லி அன்னையின் அருளை பெறலாம்.
மாணிக்க வீணை எந்தும் பாடல் வரிகள்