Thursday, November 13, 2025
HomeAmman SongsJaya jaya devi song lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்...

Jaya jaya devi song lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

Jaya jaya devi song lyrics

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்…
கனக துர்கா தேவி சரணம்…

சகலகலா வள்ளி மாலை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments