Friday, January 16, 2026
HomeAmman Songsமீனாட்சி அம்மன் 108 போற்றி | meenakshi amman 108 potri

மீனாட்சி அம்மன் 108 போற்றி | meenakshi amman 108 potri

Meenakshi 108 Potri | Meenakshi Amman 108 Potri இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மீனாட்சி அம்மன் 108 போற்றி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருவடிகள் போற்றி புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்

============

மீனாட்சி அம்மன் 108 போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அருமறையின் வரம்பே போற்றி

ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி

ஓம் அரசிளங்குமரியே போற்றி

ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி

ஓம் அமுத நாயகியே போற்றி

ஓம் அருந்தவ நாயகியே போற்றி

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி

ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

ஓம் ஆதியின் பாதியே போற்றி

ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆனந்த வல்லியே போற்றி

ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி

ஓம் இமயத்தரசியே போற்றி

ஓம் இடபத்தோன் துணையே போற்றி

ஓம் ஈசுவரியே போற்றி

ஓம் உயிர் ஓவியமே போற்றி

ஓம் உலகம்மையே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி

ஓம் ஏகன் துணையே போற்றி

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

ஓம் கனகமணிக்குன்றே போற்றி

ஓம் கற்பின் அரசியே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி

ஓம் கல்விக்கு வித்தே போற்றி

ஓம் கனகாம்பிகையே போற்றி

ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி

ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி

ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

ஓம் கூடற்கலாப மயிலே போற்றி

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி

ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி

ஓம் சிவானந்தவல்லியே போற்றி

ஓம் சிங்காரவல்லியே போற்றி

ஓம் செந்தமிழ் தாயே போற்றி

ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

ஓம் சேனைத்தலைவியே போற்றி

ஓம் சொக்கர் நாயகியே போற்றி

ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி

ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி

ஓம் திருவுடையம்மையே போற்றி

ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

ஓம் திருநிலை நாயகியே போற்றி

ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி

ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

ஓம் தென்னவன் செல்வியே போற்றி

ஓம் தேன்மொழி அம்மையே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி

ஓம் நற்கனியின் சுவையே போற்றி

ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

ஓம் நல்ல நாயகியே போற்றி

ஓம் நீலாம்பிகையே போற்றி

ஓம் நீதிக்கரசியே போற்றி

ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

ஓம் பழமறையின் குருந்தே போற்றி

ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி

ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

ஓம் பசுபதி நாயகியே போற்றி

ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி

ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி

ஓம் பார்வதி அம்மையே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பெரிய நாயகியே போற்றி

ஓம் பொன்மயில் அம்மையே போற்றி

ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி

ஓம் மங்கள நாயகியே போற்றி

ஓம் மழலைக்கிளியே போற்றி

ஓம் மனோன்மணித் தாயே போற்றி

ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி

ஓம் மாயோன் தங்கையே போற்றி

ஓம் மாணிக்கவல்லியே போற்றி

ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

ஓம் மீனாட்சி அம்மையே போற்றி

ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி

ஓம் வடிவழகு அம்மையே போற்றி

ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

ஓம் வேதநாயகியே போற்றி

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி

இந்த மீனாட்சி அம்மன் 108 போற்றி | meenakshi amman 108 potri பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ambal Songs, அம்பாள் பாடல்கள், Meenakshi Amman Songs, மீனாட்சி அம்மன், 108 போற்றிகள் மீனாட்சி அம்மன் 108 போற்றி மீனாட்சி அம்மன் 108 போற்றி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments