Maayee maghamaayee mani manthira Sehariye இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே! ஆதி பராசக்தி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆயி மகமாயி.. ஆயிரம் கண்ணுடையாள்

நீலி திரிசூலி.. நீங்காத பொட்டுடையாள்

சமயபுரத்தாளே.. சாம்பிராணி வாசகியே

சமயபுரத்தை விட்டுச் சடுதியிலே வாருமம்மா..

============

மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே

எங்க ஆயி உமையானவளே, ஆத்தா.. என் மாரிமுத்தே

(மாயி)

சிலம்பு பிறந்ததம்மா, சிவலிங்கச் சாலையிலே

பிரம்பு பிறந்ததம்மா, பிச்சாண்டி சன்னிதியில்

உடுக்கை பிறந்ததம்மா, உருத்திராட்ச பூமியிலே

பம்பை பிறந்ததம்மா, பளிங்குமா மண்டபத்தில்

(மாயி)

பரிகாசம் செய்தவரைப் பதைபதைக்க வெட்டிடுவே

பரிகாரம் கேட்டுவிட்டா, பக்கத்துணை நீ இருப்பே

மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை

நீ பார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்

(மாயி)

குழந்தை வருந்துவது, கோவிலுக்குக் கேட்கலையோ?

மைந்தன் வருந்துவது, மாளிகைக்குக் கேட்கலையோ?

ஏழைக் குழந்தையம்மா.. எடுத்தோர்க்குப் பாலனம்மா

உன் தாளைப் பணிந்து விட்டால், தயவுடனே காருமம்மா!

கத்தி போல் வேப்பிலையாம்.. காளியம்மன் மருத்துவராம்

ஈட்டி போல் வேப்பிலையாம்.. ஈஸ்வரியின் அருமருந்தாம்

வேப்பிலையில் உள்ளிருக்கும்.. விந்தைதனை யார் அறிவார்

ஆயா மனமிரங்கு – என் ஆத்தா மனமிரங்கு

அன்னையே நீ இரங்கு என் அம்மையே நீ இறங்கு!

இந்த | maayee maghamaayee mani manthira sehariye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள், Mariamman Bhakti Padalgal மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே! ஆதி பராசக்தி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment