தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் | dakshinamurthy gayathri mantram

தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் ஜபித்து வாருங்கள் . வியாழக் கிழமை என்றாலே நினைவுக்கு வரும் தெய்வம் தட்சிணாமூர்த்தி (தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் | dakshinamurthy gayathri mantram). குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம்… ஸ்ரீதட்சிணாமூர்த்தி. சிவனாரின் வடிவங்களில் ஒன்று . சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தென் முகக் கடவுள். தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால்தான், அவரின் திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம்.

தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம், Dakshinamurthy Gayatri Mantra, தக்ஷிணாமூர்த்தி காயத்ரி காயத்ரி மந்திர‌ வரிகள். Om Dakshinamurtye vidmahe dhyaanastaaya dheemahi Lyrics

============

Dakshinamurthy Gayathri Mantra

ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்

வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை   ஜபித்து வாருங்கள். வீட்டில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் .

குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;

என்பது ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு உரிய மூலமந்திரம். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம். நற்பலன்களையெல்லாம் வழங்கும்.சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி  மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் ,குடும்பத்தில் வீண் விவாதங்கள் குறையும் .  எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

இந்த | dakshinamurthy gayathri mantram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Mantras Dakshinamurthy Gayathri Mantra போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment