Saturday, March 14, 2026
HomeKrishnar Songsகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட | kuzhaloothi manamellam kollai konda

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட | kuzhaloothi manamellam kollai konda

Kuzhaloothi Manamellam kollai konda Pinnum kuraiyethum enakkethadi இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Kuzhaloothi Manamellam kollai konda Pinnum kuraiyethum enakkethadi Song Lyrics by Othukadu Venkata subbaiyer.

============

பல்லவி

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்

குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே)

அனுபல்லவி

அழகான மயிலாடவும் (மிக)

காற்றில் அசைந்தாடும் கொடி போலவும்

மத்யம கால சாஹித்யம்

அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே

தனைமறந்து புள்ளினம் கூட

அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்

நலம் காண ஒரு மனம் நாட

தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட

தகிட ததிமி என நடமாட

கன்று பசுவினமும் நின்று புடைசூழ

என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு

சரணம்

மகர குண்டலம் ஆடவும் (கண்ணன்)

அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்

மிகவும் எழில் ஆகவும்

காற்றில் மிளிரும் கொடி போலவும் (/துகில் ஆடவும் )

(அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே…)

இந்த குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட | kuzhaloothi manamellam kollai konda பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments