Saturday, March 14, 2026
HomeAyyappan Songsதுளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் | thulasimani maalai aninthu sabarimalai

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் | thulasimani maalai aninthu sabarimalai

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் ஐயப்பன் பாடல் வரிகள். Thulasimani Maalai aninthu Sabarimalai sentriduvom – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்

தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை)

பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே

பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை)

சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து

சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து

கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி

குணகரனை அனுதினம் நினைந்து

இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து

பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து

குருவடிவானவன் கருணையை அறிந்து

திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே (துளசிமணி மாலை)

பவள‌ மணித் திருமார்பினிலே பந்தளராஜனின் ஆபரணம்

அவனியெல்லாம் போற்றிடவே அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்

பலவினைகள் நீங்கிடவே பகவான் நாமம் பாடிடுவோம்

நம் கவலையெல்லாம் மறந்திடவே கருணை மழையில் கூடிடுவோம் (துளசிமணி மாலை)

இந்த துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் | thulasimani maalai aninthu sabarimalai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments