Swamiyai Nambi Azhaithaal Lyrics Tamil | ஸ்வாமியை நம்பி அழைத்தால்

ஸ்வாமி ஐயப்பனின் (Swamiyai nambi azhaithaal) மிக அருமையான பக்தி பாடல்களில் இந்த பாடலும் ஒன்று… ஸ்வாமியின் அருளை பெற அனைவரும் பாடலை பாடி வணங்குவோம்….


ஸ்வாமியை நம்பி அழைத்தால்
ஸ்வாமி சரணமென்றுள்ளம் நினைத்தால் 
கைபிடிப்பார் என்றும் கைவிடமாட்டாரே 
கலியுக வரதனய்யப்பா 
ஸ்வாமி சபரிகிரீசனய்யப்பா! 
 
 ஆட்டங்கள் ஆடி அழைத்தேன் 
சரணம் சொல்லியே பாதம் பிடித்தேன்! 
 நொந்து தெளிந்து விளங்கிய என்னில் 
மணிகண்ட மாதவனொளியே 
ஸ்வாமி நீயன்றி ஏது இங்கு வழியே!
 
  

 
வாழ்வும் தாழ்வும் கடந்தேனே 
காப்பாற்று என்று விழுந்தேனே! 
 கர்மத்தின் ஆற்றினில் துடிக்குது என்னுயிர் 
கரையினைக் காட்டிடு கண்ணால் 
எந்தன் வாழ்க்கையும் ஓடுது உன்னால்! 
 கானலாய் காண்கின்ற உலகில் 
புரியாததோர் இருள் தரும் படிகள் 
தாண்டி வந்தய்யனைக் காண்கின்ற பொழுதில் ஒளி தந்த பதினெட்டு படிகள் 
எந்தன் சந்ததி நற்கதி தேடும்! 
 ஸ்வாமியை நம்பி அழைத்தால் 
ஸ்வாமி சரணமென்றுள்ளம் நினைத்தால் 
கைபிடிப்பார் என்றும் கைவிடமாட்டாரே 
கலியுக வரதனய்யப்பா 
ஸ்வாமி சபரிகிரீசனய்யப்பா!

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment