Thursday, November 13, 2025
HomeAyyappan SongsArul Surakkum Ayyane Vaa Vaa song Tamil Lyrics அருள் சுரக்கும் ஐயனே வா...

Arul Surakkum Ayyane Vaa Vaa song Tamil Lyrics அருள் சுரக்கும் ஐயனே வா வா! அலங்கார ரூபனே வா

Arul Surakkum Ayyane Vaa Vaa lyrics tamil |அருள் சுரக்கும் ஐயனே வா வா பாடல் வரிகள்!!!
அருள் சுரக்கும் ஐயனே வா வா பாடல் வரிகள் (Arul Surakkum ayyane) இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது...  ஸ்வாமியின் அருளை பெற அனைவரும் பாடலை பாடி வணங்குவோம்....
அருள் சுரக்கும் ஐயனே வா வா!
அலங்கார ரூபனே வா வா! 
அனாத ரக்ஷகனே வா வா! 
அஹிம்சா மூர்த்தியே வா வா! 
 
 ஆனந்த விக்ரஹனே வா வா! 
ஆபத்தில் காப்போனே வா வா! 
ஆதிசக்தி மகனே வா வா! 
எங்கும் நிறைந்தவனே வா வா! 
 எங்கள் குலதெய்வமே வா வா! 
கலியுக வரதனே வா வா! 
கருணாகர கடவுளே வா வா! 
இரக்கம் மிகுந்தவனே வா வா!
 
  

 
இசையின் இன்பமே வா வா! 
கை தூக்கி விடுவோனே வா வா! 
சக்தி கொடுப்பவனே வா வா! 
இருமுடிப்பிரியனே வா வா! 
 ஈடிணையற்ற தேவனே வா வா! 
சத்ய ஸ்வரூபனே வா வா! 
சபரிபீட வாசனே வா வா! 
சதகுரு நாதனே வா வா! 
 சச்சிதானந்த மூர்த்தியே வா வா! 
ஐயப்பா தெய்வமே வா வா! 
அகிலலோக நாயகனே வா வா! 
எங்கள் ஐயனே வா வா வா!


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments