Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில – புஷ்பவனம் குப்புசாமி : சந்தனம், ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Arul Manakkuthu Arul Manakkuthu Sabarimalayila – Santhanam Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics
============
அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில
அது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில
நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணில
நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணில
மெய்சிலிர்க்க கேக்குதைய்யா சரண கோசம் கனவுல
துளசிமணி மால போட கார்த்திகையோ பிறக்கல (அருள் மணக்குது)
அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில
அது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில….
பசியாகி விரதமேற்கும் நினப்பு அடங்கல
என் குருசாமி வழி நடக்கும் நேரம் நெருங்கல
சத்குரு நாதனே .. குருவின் குருவே..
தனியாகி தவம் ஏற்கும் தருணம் அதுயில்ல
நான் தவிப்போரின் பசியாற்ற கருணை ஏன் இல்ல
அன்னதான பிரபுவே .. சுவாமியே…
காலை மாலை பூசை செய்யும் யோகம் இன்றில்ல
காலை மாலை பூசை செய்யும் யோகம் இன்றில்ல
நான் காத்திருக்கேன் கார்த்திகையோ இன்னும் பிறக்கல்ல
நான் காத்திருக்கேன் கார்த்திகையோ இன்னும் பிறக்கல்ல (அருள் மணக்குது)
கார்த்திகையாம் கார்த்திகை புண்ணிய மாசம்
காத்திருந்து மாலை போட வந்திடும் மாசம்
கார்த்திகையாம் கார்த்திகை புண்ணிய மாசம்
காத்திருந்து மாலை போட வந்திடும் மாசம்
நினைவாகி வனம்போக மனசு இங்கில்ல
அதை நலமாக்கி தந்திடுவான் ஐயன் தயவுல
சபரி காடே ….எருமேலி சாஸ்தாவே…..
நெய்யாகி உருக தேகம் சுகத்த விடவில்ல
இந்த மெய்யோடு ஐயன் அவன் பார்வை படவில்ல
கரிமலை ஏற்றமே.. கரிமலை இறக்கமே…
நாளை நாளை என்று ஏங்கி நெஞ்சம் தூங்கல
நாளை நாளை என்று ஏங்கி நெஞ்சம் தூங்கல
அட நாள்குறிப்பில் கார்த்திகையோ இன்னும் பிறக்கல
அட நாள்குறிப்பில் கார்த்திகையோ இன்னும் பிறக்கல
அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில
அது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில
நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணில
நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணில
மெய்சிலிர்க்க கேக்குதைய்யா சரண கோசம் கனவுல
துளசிமணி மால போட கார்த்திகையோ பிறக்கல (அருள் மணக்குது)
இந்த | arul manakkuthu arul manakkuthu sabarimalayila பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…