Vellai Thamarai Poovil Iruppaal இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள், சுப்பிரமணிய பாரதியார் எழுதிய சரஸ்வதி தேவி (கலைவாணி) கீர்த்தனை / கிருதி பாடல் வரிகள். Vellai thaamarai poovil iruppaal : Subramanya Bharathi – songs Tamil Lyrics
============
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்
இந்த | vellai thamarai poovil iruppal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள், Krithis, Navarathri Special Tamil Songs Lyrics வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…