Vamsa Vridhi Durga Kavacham in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வம்ஸ வ்ருத்திகரம் துர்கா கவசம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஸ்ரீ கணேஸாய நம:

============

சனைஸ்சர உவாச

பகவன் தேவ தேவேஸ க்ருபயா த்வம் ஜகத் ப்ரபோ |

வம்ஸாக்யம் கவசம் ப்ரூஹி மஹ்யம் ஸிஷ்யாய தே (அ)னக |

யஸ்ய ப்ரபாவாத் தேவேஸ, வம்ஸோ வ்ருத்திர் ஜாயதே |

============

ஸூர்ய உவாச

ஸ்ருணு புத்ர ப்ரவக்ஷ்யாமி, வம்ஸாக்யாம் கவசம் ஸுபம் |

ஸந்தான வ்ருத்திர் யத் பாடாத், கர்ப ரக்ஷா ஸதா ந்ருணாம் || 1 ||

வந்த்யா(அ)பி லபதே புத்ராம், காக வந்த்யா ஸுதைர் யுதா |

ம்ருத வத்ஸா ஸுபுத்ரா ஸ்யாத், ஸ்ரவத் கர்பா ஸ்திர ப்ரஜா || 2 ||

அபுஷ்பா புஷ்பிணீ யஸ்ய, தாரணாஸ்ச ஸுக ப்ரஸூ꞉ |

கன்யா ப்ரஜா புத்ரிணீ ஸ்யாத், ஏதத் ஸ்தோத்ர ப்ரபாவத꞉ || 3||

பூத ப்ரேதாதிஜா பாதா யா, பாதா கலி(குல) தோஷஜா |

க்ரஹ பாதா தேவ பாதா, பாதா ஸத்ரு க்ருதா யச || 4 ||

பஸ்மீ பவந்தி ஸர்வாஸ்தா꞉, கவசஸ்ய ப்ரபாவத꞉ |

ஸர்வே ரோகா꞉ வினஸ்யந்தி, ஸர்வே பால க்ரஹாஸ்ச யே || 5 ||

(ஸூர்யன் சொல்லுகிறார் :

ஹே புத்ரனே, எந்த ஸ்தோத்திரத்தைப் படித்தால் ஸந்தான வ்ருத்தியும் எப்பொழுதும் கர்ப்ப ரக்ஷையும் உண்டாகுமோ அத்தகைய மங்களமான வம்ச விருத்தியைக் கொடுக்கும் கவசத்தை சொல்லுகிறேன் கேள்.

இதைப் படிப்பதால் மலடியும் புத்ர பாக்யம் பெறுவாள். கர்ப்பத்திலேயே குழந்தை மரிக்கும் தன்மையுள்ள ஸ்திரீயும் உயிருடன் கூடிய பிள்ளையைப் பெறுவாள். கர்ப்பவிச்சித்தி உள்ளவளும் ஸ்திரமான ப்ரஜையை அடைவாள். மேலும் இதன் மஹிமையால் புஷ்பவதியாகாதவள் புஷ்பவதியாவாள். ஸூக ப்ரசவம் ஏற்படும். பெண்களையே பெற்றெடுப்பவள் புத்ரர்களையும் பெறுவாள்.

மற்றும் இதன் மஹிமையால் பூத ப்ரேதங்களால் ஏற்படும் கெடுதலும் குடும்பத்தில் பெரியோர்களால் ஏற்பட்ட தோஷமும், க்ரஹங்களாலும், தேவர்களாலும், சத்ருக்களாலும் ஏற்படும் பீடைகளும், எல்லா ரோகங்களும், பால க்ரஹங்களும் சாம்பலாகி விடுகின்றன.)

============

அத கவசம்

பூர்வே ரக்ஷது வாராஹீ ச, ஆக்னேய்யாம் அம்பிகா ஸ்வயம் |

தக்ஷிணே சண்டிகா ரக்ஷேத், நைர்ருத்யாம் ஹம்ஸ வாஹினீ || 6 ||

வாராஹீ பஸ்சிமே ரக்ஷேத், வாயவ்யாம் ச மஹேஸ்வரீ |

உத்தரே வைஷ்ணவீ ரக்ஷேத், ஈஸான்யாம் ஸிம்ஹ வாஹினீ || 7 ||

ஊர்த்வம் து ஸாரதா ரக்ஷேத், அதோ ரக்ஷது பார்வதீ |

ஸாகம்பரீ ஸிரோ ரக்ஷேன், முகம் ரக்ஷது பைரவீ || 8 ||

கண்டம் ரக்ஷது சாமுண்டா, ஹ்ருதயம் ரக்ஷதாச்சிவா |

ஈஸானீ ச புஜௌ ரக்ஷேத், குக்ஷிம் நாபிம் ச காளிகா || 9 ||

அபர்ணா ஹ்யுதரம் ரக்ஷேத், கடிம் பஸ்திம் சிவ ப்ரியா |

ஊரூ ரக்ஷது கௌமாரீ, ஜயா ஜானு த்வயம் ததா || 10 ||

குல்பௌ பாதௌ ஸதா ரக்ஷேத், ப்ரஹ்மாணீ பரமேஸ்வரீ |

ஸர்வாங்கானி ஸதா ரக்ஷேத், துர்கா துர்கார்தி நாஸினீ || 11 ||

(கிழக்கில் வாராஹியும், அக்னி திக்கில் அம்பிகையும், தெற்கில் சண்டிகையும், நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும், மேற்கில் வாராஹியும், வாயு திக்கில் மஹேஸ்வரியும், வடக்கில் வைஷ்ணவியும், ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும், மேலே சாரதையும், கீழே பார்வதியும், சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும், கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும். புஜங்களை ஈசானியும், மார்பையும், நாபியையும், காலிகையும், வயிற்றை அபர்ணையும், இடுப்பையும், மூத்திர பையையும் சிவப்ரியையும், துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும், கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும், எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான துர்க்கையும் எப்பொழுதும் காக்க வேண்டும்.)

நமோ தேவ்யை மஹா தேவ்யை துர்காயை ஸததம் நம꞉ |

புத்ர ஸௌக்யம் தேஹி தேஹி கர்பரக்ஷாம் குருஷ்வ ந꞉ || 12 ||

============

வம்ஸ வ்ருத்தி மூல மந்த்ரம்

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம், ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம், ஜம் ஜம் ஜம், மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ ரூபாயை, நவ கோடி மூர்த்யை, துர்காயை நம꞉ ||

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம், துர்கார்தி நாஸினீ, ஸந்தான ஸௌக்யம் தேஹி தேஹி வந்த்யாத்வம் ம்ருத வத்ஸத்வம் ச ஹர ஹர கர்ப ரக்ஷாம் குரு குரு ஸகலாம் பாதாம் குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் அக்ருதாமம் ச நாஸய நாஸய

ஸர்வ காத்ராணி ரக்ஷ ரக்ஷ கர்பம் போஷய போஷய ஸர்வோபத்ரவம் ஸோஷய ஸோஷய ஸ்வாஹா ||

============

பல ஸ்ருதி

அனேன கவசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரம் |

ருது ஸ்னாத ஜலம் பீத்வா பவேத் கர்பவதீ த்ருவம் || 13 ||

(மஹாதேவியான துர்க்கா தேவிக்கு எப்பொழுதும் நமஸ்காரம். புத்திர சௌக்யத்தைக் கொடு. கொடு. எங்களுக்குக் கர்ப்ப ரக்ஷையைச் செய்.

ஓம் ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம், ஸ்ரீம், ஸ்ரீம், ஸ்ரீம், ஐம், ஐம், ஐம், மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ ரூபியும், ஒன்பது கோடி மூர்த்தியாயுமுள்ள துர்க்கையின் பொருட்டு நமஸ்காரம்.

ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம், ஹே கடும் பீடையைப் போக்குபவளே, ஸந்தான ஸௌக்யத்தைக் கொடு கொடு. மலடியாயிருத்தலையும், குழந்தைகள் இறந்து போவதையும் போக்க வேண்டும். போக்க வேண்டும். கர்ப்ப ரக்ஷையைச் செய். செய். குலத்தில் உண்டானதும், வெளியில் உண்டானதும், பிறரால் செய்யப்பட்டதும் தன் கர்ம வசத்தால் ஏற்பட்டதுமான எல்லா விதமான பீடையையும் அழித்துவிடு. அழித்துவிடு. எல்லா சரீரங்களையும் காப்பாற்று. காப்பாற்று. கர்ப்பத்தை விருத்தி செய். விருத்தி செய். எல்லாவிதமான உபத்ரவத்தையும் போக்கிவிடு, போக்கிவிடு.

இந்த கவசத்தை பஹிஷ்டையாயிருந்து ஸ்நானம் செய்த மறுதினம் முதல் “சாகம்பரீ சிரோரக்ஷேத்” என்று சொல்லப்பட்டபடி எதிரில் தீர்த்தத்தை வைத்துக் கொண்டு ஏழுமுறை அங்கங்களைத் தொட்டுக் கொண்டும், ஜபித்தும் தீர்த்தத்தை ப்ராசனம் செய்வதால் நிச்சயமாக கர்ப்பவதியாவாள்.)

கர்ப பாத பயே பீத்வா த்ருட கர்பா ப்ரஜாயதே ||

அனேன கவசேனாத மார்ஜிதா ய நிஸாகமே |

ஸர்வ பாதா வினிர்முக்தா கர்பிணீ ஸ்யான் ந ஸம்ஸய꞉ ||

அனேன கவசேனேஹ க்ரந்திதம் ரக்த தோரகம் |

கடி தேஸே தாரயந்த்ரி ஸுபுத்ர ஸுக பாகினீ |

அஸூத புத்ரம் இந்த்ராணி ஜயந்தம் யத் ப்ரபா வத꞉ ||

குரூபதிஷ்டம் வம்ஸாக்யம் கவசம் ததிதம் ஸதா |

குஹ்யாத் குஹ்யாதரச் சேதம் ந ப்ரகாஸ்யம் ஹி ஸர்வதா꞉ |

தாரணாத் படனாதஸ்ய வம்ஸச்சேதோ நஸ் ஜாயதே ||

பாலாவி நஸ்யந்தி பதந்தி கர்பாஸ் தத்ராவலா கஷ்டயுதாஸ் ச வந்யாஹா |

பால க்ருஹைர் பூதகணைஸ் ச ரோஹைர் நையத்ர தர்மா சரணம் க்ருஹேஸ்யாத் ||

(கர்ப்பம் கலைந்து விடும் என்று பய மேற்பட்ட போது, மேற்கண்ட தீர்த்தத்தைப் ப்ராசனம் செய்வதால் ஸ்திரமான கர்ப்பமுடையவளாவாள். ஸாயங்காலத்தில் இக்கவசத்தை ஜபித்து அங்கங்களை புரோக்ஷித்துக் கொண்ட கர்ப்பிணியானவள் எல்லாவித பாதைகளினின்றும் விடுபடுவாள். இதில் ஸந்தேஹமே இல்லை. இக்கவசத்தை முடியிட்ட சிகப்பு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜபித்தால் ஸத்புத்ர ஸூகம் உடையவளாவாள். இதன் மஹிமையால் இந்த்ராணியானவள் ஜயந்தனென்ற புத்திரனை பெற்றெடுத்தாள். ஹே நண்பனே, ரஹஸ்யத்தினும், ரஹஸ்யமானதும் குருவினால் உபதேசிக்கப்பட்டதுமான வம்ச கவசத்தை எங்கும் வெளியிடக்கூடாது. இதைப் படிப்பதால் வம்சத்துக்கு அழிவு ஏற்படாது. எந்த வீட்டில் தர்மானுஷ்டானம் இல்லையோ அங்கு குழந்தைகள் இறக்கிறார்கள். கர்ப்பம் சிதறும். ஸ்திரீகள் மலடிகளாயும், பாலக்ரஹம், பூதகணம், ரோகம் முதலிய கஷ்டங்களால் பீடிக்கப்பட்டவர்களாயும் ஆகிறார்கள். இதனால் க்ருஹங்களில் எப்பொழுதும் நல்ல கார்யங்கள் நடக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.)

|| இதி ஶ்ரீ ஞான பாஸ்கரே வம்ஸ வ்ருத்தி கரம் துர்கா கவசம் ஸம்பூர்ணம் |

============

இந்த வம்ஸ வ்ருத்திகரம் துர்கா கவசம் | vamsa vridhi durga kavacham in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், Stotram வம்ஸ வ்ருத்திகரம் துர்கா கவசம் வம்ஸ வ்ருத்திகரம் துர்கா கவசம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment