Garbarakshambigai Stotram in tamil | Garbarakshambigai Stotram by Rishi Shaunaka |Mantra for Protection Of Womb இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷா அம்பிகா ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்திரம்
எஷ்யேஷி பகவன் ப்ரும்ஹன், ப்ராஜா – கர்த்த: ப்ரஜா – பதே
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச- இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் …1
அஸ்விநௌ தேவ தேவேசௌ, ப்ரக்ருஹ்ணீதாம் பலிம் த்விமம்
ஸாபத்யாம் கர்பிணீம் ச-இமாம் ச, ரக்ஷதம் பூஜயாSனயா …2
ருத்ராஸா ஏகாதாஸ ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணந்து பலிம் த்விமம்
யுஷ்மாகம் ப்ரீதயே வ்ருத்தம், நித்யம் ரக்ஷந்து கர்பிணீம் …3
ஆதித்யா த்வாதஸ ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணீத்வம் பலிம் த்விமம்
யுஷ்மாகம் தேஜஸாம் வ்ருத்த்யா, நித்யம் ரக்ஷத கர்பிணீம் …4
விநாயக கணாத்யக்ஷ, சிவ புத்ர மஹாபல
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச-இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம்…5
ஸ்கந்த ஷண்முக தேவேஸ புத்ரப்ரீதி விவர்த்தன
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச-இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம்…6
ப்ரபாஸ: ப்ரபவஸ் – ஸ்யாம:, ப்ரத்யூஷோ மாருதோ – Sநல:
த்ருவோதரா தரஸ்சைவ, வஸவோஷ்டௌ ப்ரகீர்த்திதா:
ப்ரக்ருஹ்ணீத்வம் பலிம் ச-இமம், நித்யம் ரக்ஷத கர்பிணீம் …7
பிதுர் – தேவி பிதுஸ் – ஸ்ரேஷ்டே, பஹு புத்ரி மஹா – பலே,
பூத ஸ்ரேஷ்டே நிஸா வாஸோ, நிர்வ்ருத்தே ஸௌநக – ப்ரியே
ப்ரக்ருஷ்ணீஷ்வ பலிம் ச – இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் …8
ரக்ஷ ரக்ஷ மஹா தேவ, பக்த – அனுக்ரஹ – காரக
பக்ஷிவாஹன கோவிந்த, ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் …9
============
Pregnancy Godess – Garbarakshambigai Devi Temple in Thirukarukavur
============
கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகங்களை ஜபிக்கும் முறை
(கீழே கொடுத்துள்ள வரிசைப்படி, தினமும் 108 முறை ஜபம் செய்வது சிறந்தது)
கருவின்
2 -ம் மாதத்தில் – முதல் 2 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
3 -ம் மாதத்தில் – முதல் 3 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
4 – ம் மாதத்தில் – முதல் 4 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
5 – ம் மாதத்தில் – முதல் 5 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
6 – ம் மாதத்தில் – முதல் 6 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
7 – ம் மாதத்தில் – முதல் 7 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
8 -ம் மாதத்தில் – முதல் 8 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
9 – ம் மாதத்தில் – எல்லா (9) ஸ்லோகங்களை ஜபிக்கவும்
(கருவின் இரண்டாவது மாதத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது இல்லை. கருவுற்றது தெரிந்தது முதலோ, அல்லது இந்த ஸ்லோகம் கிடைத்த உடனேயோ தொடங்கி, அந்த மாதத்திற்கான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதிலிருந்து சுப-ஆரம்பம் செய்யலாம்.)
============
கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்திரம் பொருள்
1. பகவானே! ப்ரம்ஹ தேவனே! மக்களைப் படைப்பவரே ! மக்களைக் காப்பவரே ! (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்
2. அஸ்வினி தேவ தேவர்களே ! நைவேத்யத்துடன் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்வீர் ! இந்தக் குழந்தையோடு கூடிய கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.
3. ஏகாதச ருத்ர தேவர்களே ! உங்களது விருப்பத்திற்காகவும், க்ருபைக்காகவும் செய்யப்பட்ட நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
4. துவாதச ஆதித்ய தேவர்களே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! உங்களது அதீதமான தேஜஸினால் குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
5. விநாயகரே ! கணபதியே ! சிவபெருமான் மைந்தரே ! மஹா பலசாலியே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.
6. கந்தக் கடவுளே ! ஷண்முக தேவனே ! புத்திரர்களிடம் அன்பை வளர்த்துக் கொள்ள அருளுபவரே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
7. ப்ரபாஸர், ப்ரபவர், ஸ்யாமர், ப்ரத்யூஷர், மாருதர், அநலர், த்ருவர், தராதரர் ஆகிய கீர்த்தி மிகுந்த அஷ்ட வஸூ தேவர்களே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
8. என் முன்னோர்களுக்கும் (பிதுர்களுக்கும்) தேவியாக விளங்கிய தேவியே ! பிதுர்களை எல்லாம் விட சிறப்பு மிக்க அன்னையே ! மக்கள் அனைவரையும் குழந்தைகளாகக் கொண்டு தாயாக விளங்குபவளே ! மிகுந்த ஆற்றல் உடைய பராசக்தியே ! அனைத்திற்கும் (அனைத்துப் பொருள்களுக்கும்) மேலானவளே ! ராத்திரி தேவியாக இருந்து காத்து ரக்ஷிப்பவளே ! தோஷங்களற்ற லலிதா பரமேஸ்வரியே ! சௌநகரால் ப்ரியத்துடனும் பக்தி ஸ்ரத்தையுடனும் பூஜிக்கப்பட்ட மாதாவே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வாயாக ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷித்தருள்வாயாக.
9. மஹாதேவனே ! பக்தர்களுக்கு அருள்புரிபவனே ! காத்தருள்வாய். கருடனை வாகனமாகக் கொண்ட கோவிந்தா ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.
இந்த ஸ்ரீ கர்ப்ப ரக்ஷா அம்பிகா ஸ்தோத்ரம் | garbarakshambigai stotram tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Mantras, Stotram, Garbarakshambigai Amman Mantras ஸ்ரீ கர்ப்ப ரக்ஷா அம்பிகா ஸ்தோத்ரம் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷா அம்பிகா ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…