Garbarakshambigai slokam in tamil | Mantra for Protection Of Womb இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குழந்தை பேறு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்திரம்

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே

பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம்

( ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவுக்கு பின்னரும்…)

வாபீதடே வாமபாகே வாம

தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம்

மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி

கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய

சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி

தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய

ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர

வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா

திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ

பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே – வேதி

காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்

பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் – கர்ப்ப

ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் – வாத்ய

கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்

ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் – தேவ

ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் – தீக்ஷி

தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை

நித்யம் படேத்யஸ்து பக்த்யா – புத்ர

பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)

|| இதி ஸ்ரீ ப்³ரஹ்ம ஸ்ரீ அனந்த ராம தீ³க்ஷீதா விரசிதம் க³ர்ப்ப⁴ரக்ஷாஅம்பி³கா ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம்ʼ ||

ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை, கருவில் இருக்கும் குழந்தையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், குழந்தைக்காக ஏங்குபவர்கள், கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள், சுகப் பிரசவம் வேண்டி கோயிலுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அருள்பாலிக்கிறாள்.

============

கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்திர மகிமை

அம்பாளிடம் சரணாகதி அடைந்து “அம்மா நீயே எனக்கு எல்லாமும்” என்று மனமுருகி வேண்டினால் அன்னையானவள் நிச்சயம் காத்து ரக்ஷிப்பாள். பிரார்த்தனையின் வடிவமே ஸ்தோத்ரங்கள். ஒவ்வொரு ஸ்தோத்திரத்தையும் அதற்குரிய விதிமுறைகளின் படி பாராயணம் செய்தால் நிச்சயம் வாழ்வின் விடிவெள்ளி தோன்றும். நாம் உணரக்கூடிய, வரவேற்றத்தக்க மாறுதல்கள் தென்படும்.

உலக நன்மைக்காக, பெரும் மஹான்களும் ரிஷிகளும் அருளிச் செய்திருக்கும் ஸ்தோத்ரங்கள் ஏராளம். அவை எல்லாவற்றிலும் மணிமகுடமாக கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரத்தை சொல்லலாம். ஏன்? பிற ஸ்தோத்ரங்கள் நாம் நமக்காக பிரார்த்திப்பது. ஆனால் கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம் வயிற்றில் வளரும் தன் கருவிற்காக அன்னை பிரார்த்திப்பது.

============

Pregnancy Godess – Garbarakshambigai Devi Temple in Thirukarukavur

============

குழந்தைப்‌ பாக்கியம்‌ பெற கர்ப்பரட்சாம்பிகை அம்மன் வழிபாடு

குழந்தைப்‌ பேறு இல்லாதவர்கள்‌, அம்பாள்‌ சன்னதியில்‌ நெய்யால்‌ படிமெழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்து கர்ப்பரட்சாம்பிகையின்‌ திருப்பாதத்தில்‌ வைத்து மந்திரித்து கொடுக்கப்படும்‌. இந்த நெய்‌ பிரசாதத்துடன்‌ அரை கிலோ சுத்தமான நெய்‌ கலந்துவைத்துக்கொண்டு இரவு படுக்கைக்குச்‌ செல்லும்போது சிறிதளவு எடுத்து தம்பதியினர்‌ அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகையை நினைத்து வணங்கி 48 நாள்கள்‌ தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்‌. கணவரால்‌ நாள்தோறும்‌ நெய்‌ சாப்பிட இயலாவிட்டாலும்‌

மனைவி தினமும்‌ நெய்‌ சாப்பிட்டு வர வேண்டும்‌. நெய்‌ சாப்பிடும்‌ காலங்களில்‌ உணவில்‌ பழக்கவழக்கங்களில்‌ பத்தியங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள்‌ அதையும்‌ தொடரலாம்‌. பெண்கள்‌ மாத விலக்கு காலங்களில்‌ 5 நாள்கள்‌ நெய்‌ சாப்பிட வேண்டாம்‌. இவ்வாறு செய்தால்‌ ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அருளால்‌ மகப்பேறு உண்டாகும்‌.

இக்கோயிலில்‌ சுவாமியையும்‌, அம்பாளையும்‌, வள்ளி தெய்வானையுடன்‌ சுப்பிரமணியரையும்‌ ஒரு சேர வலம்‌ வந்தால்‌ வேண்டியது கிடைக்கும்‌ என நம்பப்படுகிறது. இக்கோயில்‌ சோமாஸ்கந்தர்‌ அமைப்பில்‌ உள்ளதால்‌, இத்திருக்கோயில்‌ பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம்‌ வரும்‌ தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம்‌ கிடைக்கும்‌ என்பது வரலாறு.

இந்த குழந்தை பேறு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் | garbarakshambigai mantra for protection of womb பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Mantras, Slokas, Garbarakshambigai Amman Mantras குழந்தை பேறு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் குழந்தை பேறு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment