Tuesday, February 17, 2026
HomeAmman Songsபத்ர காளி சரணாகதி மந்திரம் | bhadrakali saranagathi mantra

பத்ர காளி சரணாகதி மந்திரம் | bhadrakali saranagathi mantra

Bhadrakali Saranagathi Mantra (Upasanai) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பத்ர காளி சரணாகதி மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சத்ருபய சங்கட சர்ப்பதோஷ நாஸினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா

சித்த சுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா

சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா

உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய். ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி, மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி

நிரந்தரி நீலி கால பைரவி, திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி

சரணம் சரணம் சரணம் தேவி, எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

============

பத்ர காளி சரணாகதி மந்திரம் | Bhadrakali Saranagati Mantra Meaning

கிழக்கில் மேற்கில் வாராஹியும், தெற்கில் சண்டிகையும், வடக்கில் வைஷ்ணவியும், அக்னி திக்கில் அம்பிகையும், வாயு திக்கில் மஹேஸ்வரியும், நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும், ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும், மேலே சாரதையும், கீழே பார்வதியும், சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும், கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும்,

புஜங்களை ஈசானியும், மார்பையும் நாபியையும் காலிகையும், வயிற்றை அபர்ணையும், இடுப்பையும் மூத்திர பையையும் சிவப்ரியையும், துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும், கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும், எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான துர்க்கையும், அடியேனையும், அடியேனின் குடும்ப உறுப்பினர்கள் அனனவரையும், எப்பொழுதும் காக்க வேண்டும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

*** ஓம் சக்தி ***

இந்த | bhadrakali saranagathi mantra பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், Bhadrakali Songs and Mantras, காளிகாம்பாள் பாடல்கள் பத்ர காளி சரணாகதி மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments