ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு Aadhi Paramesvariyin aalayamae Verkaadu இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு பி. சுசீலா பாடிய நவராத்திரி சிறப்பு ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா தொகுப்பின் – அம்மன் பாடல் வரிகள். Aadhi Parameswariyin Aalayame Verkaadu – Navarathri Special Amman / Devi Song by P. Suseela from Album Raksha Raksha Jagan Matha – Tamil Lyrics

============

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு

அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி)

குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்

மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்

மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்

மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்

எந்நாளும் ஒளி கொடுப்பாள்

அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்

அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்

அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்

அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கம்

நம்பிவரும் எல்லோர்க்கும் நல்ல தொரு வழி பிறக்கும்

நாயகி திருவருளே பொன்னான வாழ்வளிக்கும் (ஆதி)

வேற்காடு திருத்தலமே வந்தவர்ககு புகழ் கொடுக்கும்

வெற்றிதரும் திருச்சாம்பல் கொண்டவர்க்கு பலன் கிடைக்கும்

கருமாரி திருப்பதமே வேண்டிவந்தால் வரம் கொடும்

கற்பூர ஜோதியிலே எந்நாளும் அருள் கிடைக்கும்

எந்நாளும் அருள் கிடைக்கும் (ஆதி)

இந்த | aadhi parameswariyin aalayame verkaadu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், p susheela jaya jaya devi, பி சுசீலா பக்தி பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Amman Devotional Songs ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்.

Leave a Comment