Thiruvilakku Poojai Paadal Varigal, Thiruvilakku Poojai Archanai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

விளக்கே – திருவிளக்கே வேந்தன் – உடன்பிறப்பே

ஜோதி மணிவிளக்கே – சீதேவி பொன்மணியே

அந்தி விளக்கே அலங்கார நாயகியே

காந்தி விளக்கே காமாக்ஷித் தாயாரே

பசும்பொன் விளக்குவைத்து பஞ்சுத்திரிபோட்டு

குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்

ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க

மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்

மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா

சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா

பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா

பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா

கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா

புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா

அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா

============

திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை

(ஆரம்பத்தில் ஓம் என்றும் முடிவில் நம என்றும் சேர்த்துக் கொள்ளவும்)

ஓம் சிவாய நம

ஓம் சிவசக்தியே நம

ஓம் இச்சாசக்தியே நம

ஓம் கிரியா சக்தியே நம

ஓம் சொர்ண சொரூபியே நம

ஓம் ஜோதி லக்ஷ்மியே நம

ஓம் தீப லக்ஷ்மியே நம

ஓம் மஹாலக்ஷ்மியே நம

ஓம் தனலக்ஷ்மியே நம

ஓம் தான்யலக்ஷ்மியே நம

ஓம் தைர்யலக்ஷ்மியே நம

ஓம் வீரலக்ஷ்மியே நம

ஓம் விஜயலக்ஷ்மியே நம

ஓம் வித்யாலக்ஷ்மியே நம

ஓம் ஜெயலக்ஷ்மியே நம

ஓம் வரலக்ஷ்மியே நம

ஓம் கஜலக்ஷ்மியே நம

ஓம் காமாக்ஷிசுந்தரியே நம

ஓம் சுபலக்ஷ்மியே நம

ஓம் இராஜலக்ஷ்மியே நம

ஓம் கிருஹலக்ஷ்மியே நம

ஓம் சித்த லக்ஷ்மியே நம

ஓம் சீதா லக்ஷ்மியே நம

ஓம் திரிபுர லக்ஷ்மியே நம

ஓம் சர்வமங்கள காரணியே நம

ஓம் சர்வதுக்க நிவாரணியே நம

ஓம் சர்வாங்க சுந்தரியே நம

ஓம்சௌபாக்கிய லக்ஷ்மியே நம

ஓம் நவக்கிரஹ தாயினே நம

ஓம் அண்டர் நாயகியே ! நம

ஓம் அலங்கார நாயகியே ! நம

ஓம் ஆனந்த சொரூபியே நம

ஓம் அகிலாண்ட நாயகியே நம

ஓம் பிரமாண்ட நாயகியே நம

============

திருவிளக்கு போற்றி

(முடிவில் போற்றி ” என்று சேர்த்து வாசிக்கவும் )

பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி

போகமும் திருவும் புணர்ப்பாய்

முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய்

மூவுலகும் நிறைந்திருந்தாய்

வாம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய்

இயற்கையாய் அறிவொளி ஆனாய்

ஈரேழுலகும் என்றாய்

பிறர்வயமாகா பெரியோய்

பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய்

பேரருட் கடலாம் பொருளே

முடிவில் ஆற்றல் உடையாய்

மூவுலகுந் தொழ மூத்தோய்

அளவிலாச் செல்வம் தருவாய்

ஆனந்த அறிவொளி விளக்கே

ஓம் எனும் பொருளாய் உள்ளோய்

இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய்

மங்கள நாயகியே மாமணி

வளமை நல்கும் வல்லியே

அறம் வளர் நாயகி அம்மையே

மின் ஒளியம்மையாம் விளக்கே

மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய்

தையல் நாயகித் தாயே

தொண்டர் அகத்தமர் தூமணி

முக்கட் கடரின் முதல்வி

ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய்

சூடாமணியே கடரொளி

இருள் ஒழித்து இன்பம் ஈவோய்

அருள் பொழிந்து எம்மை ஆள்வோய்

அறிவினுக்கு அறிவாய் ஆனாய்

இல்லக விளக்காம் இறைவி

கடரே விளக்காம் தூயாய்

இடரைக் களையும் இயல்பினாய்

எரிசுடராய் நின்ற இறைவி போற்றி

ஞானச் சுடர்விளக்காய் நின்றாய்

அருமறைப் பொருளாம் ஆதி

தூண்டு சுடரனைய ஜோதீ

ஜோதியே போற்றி சுடரே

ஒதும் உள் ஒளி விளக்கே

இருள் கெடுக்கும் இல்லக விளக்கே

சொல்லக விளக்காம் ஜோதி

பலர்காண் பல்லக விளக்கே

நல்லக நமசிவாய விளக்கே

உவப்பிலா ஒளிவளர் விளக்கே

உணர்வு சூழ்கடந்தோர் விளக்கே

உடம்பெனும் மனையக விளக்கே

உள்ளத் தகளி விளக்கே

மடம்படு உணர் நெய்விளக்கே

உயிரெனும் திரிமயக்கு விளக்கே

இடர்படும் ஞானத்தீ விளக்கே

நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே

ஆதியாய் நடுவுமாகும் விளக்கே

அளவிலா அளவுமாகும் விளக்கே

ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே

தில்லைப் பொதுநட விளக்கே

கற்பனை கடந்த ஜோதி

கருணை உருவாய் விளக்கே

அற்புத கோல விளக்கே

அருமறைச் சிரத்து விளக்கே

சிற்பர வியோம விளக்கே

பொற்புடன் நடஞ்செய் விளக்கே

உள்ளத்திருளை ஒழிப்பாய்

கள்ளப் புலனை கரைப்பாய்

உருகுவோர் உள்ளத்து ஒளியே

பெருகு அருள் சுரக்கும் பெரும்

இருள் சேர் இருவினை எறிவாய்

அருவே உருவே அருவுருவே

நந்தா விளக்கே நாயகி

செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி

தீப மங்கள ஜோதி

மதிப்பவர் மாமணி விளக்கே

பாகம் பிரியா பராபரை

ஆகம முடிமேல் அமர்ந்தாய்

ஏகமும் நடஞ்செய் எம்மான்

ஊழி ஊழி உள்ளோய்

ஆழியான் காணா அடியோய்

ஆதியும் அந்தமும் அற்றாய்

அந்தமில் இன்பம் அருள்வோய்

முந்தை வினையை முடிப்போய்

பொங்கும் கீர்த்தி பூரண

தன்னருள் சுரக்கும் தாயே

அருளே உருவாய் அமைந்தோய்

இருநில மக்கள் இறைவி

குருவென ஞானம் கொடுப்போய்

ஆறுதல் எமக்கிங் களிப்போய்

தீதெல்லாம் தீர்க்கும் திருவே

பக்தியில் ஆழ்ந்த பரமே

எத்திக்குந் துதி ஏய்ந்தாய்

அஞ்சலென் றருளும் அன்பே

தஞ்சமென் றவரைச் சார்வோய்

ஓதுவார் அகத்துறை ஒளியே

ஓங்காரத் துள்ளொளி விளக்கே

எல்லா உலகமும் ஆனாய்

பொல்லா வினைகள் அறுப்பாய்

புகழ் சேவடி என்மேல் வைத்தோய்

செல்வாய செல்வம் தருவாய்

பூங்குழல் விளக்கே போற்றி

உலகம் உவப்புற வாழ்வருள்

உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள்

செல்வம் கல்வி சிறப்பருள்

நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய்

விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய்

நலம் எலாம் உயிர்க்கு நல்குக

தாயே நின்னருள் தந்தாய் போற்றி

தூய நின் திருவடி தொழுதனம்

போற்றி என்பார் அமரர் விளக்கே

போற்று என்பார் மனிதர் விளக்கே

போற்றி என் அன்பு பொலி விளக்கே

போற்றி போற்றி திருவிளக்கே

இந்த திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை | thiruvilakku poojai song lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள், Thiruvilakku Poojai, திருவிளக்கு பூஜை திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment