Yarenna Sonnalum Anjatha Nenjame இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே ஸ்ரீ ராம‌ பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Yarenna Sonnalum Anjatha Nenjame Song Lyrics by Othukadu Venkata subbaiyer . Tamil Kannan Paadalgal Lyrics

============

பல்லவி

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத/அஞ்சாதே நெஞ்சமே

ஐயன் கருணையைப் பாடு – ராக

ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால்

அடவோடும் ஜதியோடும் ஆடு

அருமையென வந்தப் பிறவிகளோ பல

ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின்

அனுபல்லவி

நாரத நாதமும் வேதமும் நாண

நாணக் குழல் ஒன்று ஊதுவான்

நீரதக் கழல் ஆட கோபியரும் பாட

நேர் நேர் என சொல்லித் தானாடுவான் – அந்த

அய்யன் கருணையைப் பாடு

சரணம்

தோலை அரிந்து கனி தூர எறிந்து

வெறுந் தோலைத் துணிந்தொருவன் தந்தானல்லவோ

மேலைப் பிடி அவலை வேணுமென்றே தெரிந்து

விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ

காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி

கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ – இந்த

ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை

நமக்கெதற்கு என்று தள்ளி நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி

(அய்யன் கருணையைப் பாடு)

இந்த யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே | yarenna sonnalum anjatha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள் யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment