Sonnathai Kel Kanna Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சொன்னதைக் கேள் கண்ணா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சொன்னதைக் கேள் கண்ணா பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Sonnadaik Kel Kanna Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer.

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

பல்லவி

சொன்னதைக் கேள் கண்ணா தோம் தகிட திரி தாக

தன தோமென அரவ படமாடும் அய்யா

அனுபல்லவி

தின்னவும் வெண்ணையும் செல்வமும் தானிருக்க செல்வமும் சீரும் (மிக)

அன்னை நானிருக்க புன்னகையும் நன்னகையும் காட்டி போதாதென ஒரு குழலிசைக் கூட்டி

இன்னவென அறியா உளம் மீட்டி எங்கனும் நிறைவாய் இறைவா

சரணம்

அல்லை அயல்மனை சென்று களவாடும்

தொல்லை வழக்குக்கு நீ போகாதே அவர் சொல்ல வந்தக்-கோளுரைகள்

இல்லை என்று சொல்வது தூயவன் நீ உனக்கது ஆகாதே

புல்லைக்-கடை தாங்கி மெல்ல அசை போடும் பொன்னான பசுமந்தை நீங்காதே கண்ணாஎல்லை வனம் தாண்டிப்-போகாதே போனால் இருளாகும் போது தங்கலாகாதே சொன்ன

சொல்லை மீறும் எந்தன் பிள்ளை என்று சொல்லத் தோணும் படி நடவாதே சொன்ன சொல்லை தடவாதே

இந்த சொன்னதைக் கேள் கண்ணா | sonnathai kel kanna பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs சொன்னதைக் கேள் கண்ணா சொன்னதைக் கேள் கண்ணா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment