Omkara Natham Uyarvana Vedam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Solli Koopiduvom Sabarimalai Vaasanai – K. Veeramani Ayyappa song Tamil Lyrics
============
சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை
வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை
அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர சுதன் ஐயப்பனை
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ்
சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா ||
சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை
பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை
அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை
அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை
வீட்டை விட்டு கட்டும் கட்டி
அருள்மலை புறப்படுவோம்
கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப்
பேட்டை செல்லுவோம்
பேட்டைத் துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்
கோட்டைக் காவலன் வாவரு சாமியை
கொண்டாடி மகிழ்வோம்
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு
ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு
பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு
நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு (ஸ்வாமி சரணம் ஐயப்பா)
இந்த சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் | saranam solli koopiduvom sabari பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…