சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல் வரிகள் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே! பாரதியார் பாப்பா பாடல் வரிகள். Chinnanchiru Kiliye Kannamma – Pappa Songs by Subramaniya Bharathiar song Lyrics

============

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!

அள்ளியணைத்திடவே-என்முன்னே

ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!

உள்ளம் குளிருதடீ;

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்

ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் – கருவம்

ஓங்கி வளருதடி

மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்

கள்வெறி கொள்ளுதடீ

உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா

உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்

உத்திரங் கொட்டுதடி;

என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ!

என் உயிர் நின்னதன்றோ!

என் உயிர் நின்னதன்றோ

இந்த | chinnanchiru kiliye kannamma பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Bharathiar Songs, பாரதியார் பாடல்கள் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment