Brindavanathil kannan lyrics in tamil
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த பாடல் வரிகள் (brindavanathil kannan lyrics in tamil)
மீரா திரைப்படத்தில் எம்.எஸ் சுப்புலஷ்மி அவர்கள் பாடிய ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’ கண்ணன் பாடலின் வரிகள்.
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ !
அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)
மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவத்தோரும் மயங்கிடுமாறு
தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் என செய்தான்
ஏகானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட – அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு
போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த)