Aadathu Asangathu Vaa Kanna Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆடாது அசங்காது வா கண்ணா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆடாது அசங்காது வா கண்ணா – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Aadathu Asangathu Vaa Kanna Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer.

ராகம்: மத்யமாவதி

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )

உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து

அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் )

தில்லை அம்பலத்து இறைவனும்

தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்

ஆதலினால் சிறு யாதவனே

ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே

அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே

பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே

மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே

பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )

தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை

காணவரும் அடியார் எவராயினும்

கனக மணி அசையும் உனது திருநடனம்

கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)

இந்த ஆடாது அசங்காது வா கண்ணா | aadathu asangathu vaa kanna song பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs ஆடாது அசங்காது வா கண்ணா ஆடாது அசங்காது வா கண்ணா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment