Categories: Ayyappan Songs

ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள் | Jeevan Enbathu Ullavarai lyrics tamil

Jeevan Enbathu Ullavarai En nencham Vanangum Sabarimalai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Jeevan Enbathu Ullavarai Lyrics in Tamil | ஜீவன் என்பது உள்ளவரை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள் (Jeevan Enbathu ullavarai) அற்புதமான‌ வரிகள் உடையதும், அனைவருக்கும் பிடித்தமான‌ மனதை உருக்கும் ஐயப்ப‌ பாடல்களில் ஒன்றாகும். திரு. வீரமணி அவர்கள் பாடியதும், மெல்லிய இசையில் அமைந்துள்ள‌ இந்த‌ பாடல் ஹரிஹரசுதன் ஐயப்ப சாமி பக்தர்களின் இதயத்தில் பதிந்த‌ பாடலில் ஒன்றாகும்.

ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள் (Jeevan Enbathu ullavarai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் மிக மெல்லிய இசையில் அமைந்தது… நம் ஏழைப்பங்காளன் ஐயப்பா சாமியை பாடி துதிக்க இந்த பாடல் மிக சிறந்த ஒன்றாகும்…

ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை

ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை

கார்த்திகை தோறும் மாலை அணிந்து
நாற்பது நாளும் நோன்பும் இருந்து
நாவில் ஐயன் நாமம் பொழிந்து
நடந்தே சென்று கோவிலடைந்து
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்

இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்

ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை

நெய் விள‌க்காலே அலங்காரம்
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்

சரணம் என்னும் ஓம்காரம்
சர்வமும் அதிலே ரீங்காரம்

ஆசையில் மோதும் அலையாவும்
ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌
ஜோதியைக் கண்டால் தெளிவாகும்

ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை

பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்

பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்

மகிஷியை வென்றே வாழ்வளித்தான்
மழலை வடிவில் அருள் கொடுத்தான்
அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்
அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த‌
அகிலமும் வாழவும் துணை இருப்பான்

ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…

என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை….

இந்த | jeevan enbathu ullavarai lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் Jeevan Enbathu Ullavarai Lyrics in Tamil | ஜீவன் என்பது உள்ளவரை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்: Kandha Sashti Kavasam

Kandha Sashti Kavasam Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha Sashti Kavasam Song lyrics in…

4 weeks ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

1 month ago

ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் | Ekadantaya Vakratundaya Lyrics in Tamil

Ekadantaya Vakratundaya Lyrics in Tamil ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் (Ekadantaya Vakratundaya Lyrics) பாடல் வரிகள் கணநாயகய…

2 months ago

108 Vinayagar potri in Tamil | 108 விநாயகர் போற்றி

108 Vinayakar potri in Tamil 108 விநாயகர் போற்றி (108 Vinayakar potri lyrics in tamil) இந்த…

2 months ago

ஸ்ரீ விநாயக அஷ்டோத்திர ச’த நாமாவளி | vinayaka ashtothram tamil

Vinayaka Ashtothram Lyrics in Tamil ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர ச'த நாமாவளி - Vinayaka ashtothram tamil ஓம்…

2 months ago

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

8 months ago