Categories: Navagraha Songs

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram in tamil

Guru Paduka Stotram Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குரு பாதுகா ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் – பாடல் வரிகள் மற்றும் பொருள்

============

Guru Paduka Stotram Lyrics in Tamil

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 01

அனந்த சம்சார சமுத்ர தார,

நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,

வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இது

என் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவது

இதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 02

கவித்வ வாராஷினி ஸாகராப்யாம்,

தௌர்பாக்ய தாவாம்புத மாலிகாப்யாம்,

தூரிக்ருதா நம்ர விபத்தி தாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

பரிபூரண பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக்கடலுமாம் இது

துரதிருஷ்டத்தீயினை போக்கும் நீர் இந்த பாதுகை

சரணாகதி அடைந்தவர்களின் துயரங்களை அழிக்கவல்லது

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 03

நதா யயோ ஸ்ரீபதிதாம் ஸமீயு,

கதாச்சிதாப்யாஷு தரித்ர வர்யா,

மூக்காஷ்ச்ச வாச்சஸ் பதிதாம் ஹி தாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

தன்னை வணங்கி துதிப்பவர்களை,

அவர்கள் ஏழைகள் என்றாலும் கூட, செல்வந்தர்களாக்கும்

ஊமைகளைக்கூட சிறந்த சொற்பொழிவாளராக்கும்

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 04

நாலீக நீகாச பதா ஹ்ரி தாப்யாம்,

நானா விமோஹாதி நிவாரிகாப்யாம்,

நம ஜனா பீஷ்டததி பிரதாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

தாமரை போன்ற குருவின் பாதங்களை நோக்கி நம்மை அழைத்து செல்வதும்

வீண் ஆசைகளை அழித்து நம்மை தூய்மைப்படுத்துவதும்

துதிப்பவரின் எண்ணங்களை நிறைவேற்றும்

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 05

ந்ருபாலி மௌலீப்ரஜ ரத்ன காந்தி,

ஸரித்வி ராஜ ஜ்ஜஷ கன்யகாப்யாம்,

ந்ருபத்வதாப்யாம் நதலோக பங்க்தேஹே,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

மன்னனின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கக்கல் போன்றது

முதலைகள் சூழ்ந்த நதியில் பிரகாசிக்கும் பெண் போன்றது

தன் பக்தனை அரசனாகவே ஆக்கும் சக்தி கொண்டது

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 06

பாபாந்த காரார்க பரம்பராப்யாம்,

தாபத்ரயாஹீந்த்ர ககேஸ்வராப்யாம்,

ஜாட்யாப்தி சம்ஸோ ஷண வாடவாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

இருண்ட பாவங்களை போக்கும் ஒளிரும் சூரியன் போன்றதும்

துன்பமெனும் நாகத்தை அழிக்கும் கருட ராஜனைப் போன்றதும்

கடல் போன்ற அஞ்ஞானத்தை எரித்து போக்கவல்ல தீ போன்றதுமான

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 07

ஷமாதி ஷட்க ப்ரத வைபவாப்யாம்,

சமாதி தான வ்ரத தீக்ஷிதாப்யாம்,

ரமாதவாங்க்ரே ஸ்திர பக்திதாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

சமாதி போன்ற ஆறு உயர்ந்த தன்மைகளை வழங்கவல்லதும்

பேரானந்த நிலையை சீடர்களுக்குத் தரவல்லதும்

என்றும் இறைவனின் திருவடியை நிலையாக வணங்கும் பக்தியைத் தரவல்லதுமான

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 08

ஸ்வார்சா பரானா கிலேஷ்டதாப்யாம்,

ஸ்வாஹா சஹாயாக்ஷ துரந்தராப்யாம்,

ஸ்வாந்தாச்ச பாவ ப்ரத பூஜநாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

எப்பொழுதும் தம் பணியில் ஈடுபட்டு

தொண்டாற்றும் சீடர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும்

நாடுபவர்களின் தன்னை உணர்தலுக்கு உதவி புரிவதுமான

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் 09

காமாதி ஸர்ப்ப வ்ரஜ காருடாப்யாம்,

விவேக வைராக்ய நிதி பிரதாப்யாம்,

போத பிரதாப்யாம் த்ருத மோக்ஷதாப்யாம்,

நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

============

பொருள்

மோகம் என்ற பாம்பினை விரட்டும் கருடனைப் போன்றதும்

விவேகம், பற்றற்ற தன்மை போன்ற செல்வங்களை ஒருவருக்கு வழங்கவல்லதும்

ஞான அறிவினை ஒருவருக்கு ஆசிர்வதிப்பதும்,

தன்னை நாடுபவர்களுக்கு விரைவாக முக்திநிலையை தருவதுமான

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

============

குரு பாதுகா ஸ்தோத்திரம் பலன்

============

Guru Paduka Stotram Significance

குரு பாதுக்க ஸ்தோத்திரம் என்பது ஒருவர் தம்முடைய‌ வாழ்க்கையில் குருவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பாடலாகும், மேலும் இப்பாடலினை உச்சரிப்பதால் குருவின் கருணை கிடைக்கும். இது ஆசிரியரின் (குருவின்) பல குணங்களைப் பாராட்டுகிறது மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தேடுபவரின் வாழ்க்கை எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை விளக்குகிறது. குரு பாதுகா ஸ்தோத்திரத்தை மன‌தில் நினைந்து உச்சரித்து, உங்கள் குருவைக் கண்டு, அவருடைய அருளைப் பெற்று, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.

இந்த | guru paduka stotram in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Guru Bhakti, குரு பக்தி குரு பாதுகா ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago