Categories: Ayyappan Songs

ஹரிவராசனம் பாடல் வரிகள் | harivarasanam song lyrics tamil with meaning

Harivarasanam song lyrics tamil with meaning

இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக ஹரிவராசனம் பாடல் வரிகள் (Harivarasanam song lyrics)  கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஹரிவராசனம் பாடல் விளக்கம் காணொளி இந்த பதிவில் உள்ளது

சபரிமலை யாத்திரையில் அனைவரும் கேட்கின்ற‌ கீர்த்தனம் ஹரிவராசனம் ஆகும். சபரிமலையில் ஒவ்வொரு நாள் இரவு வேளையில் நடை சாத்தப்படும்போது பாடப்படும் பக்திப் பாடல் ஹரிவராசனம் ஆகும். இது சபரிமலை வாசனான‌ ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாகும். ஹரிவராசனம் பாடல் கேட்டிருப்போம், அதன் பொருள் என்னவென்று தெரிந்துகொள்ள‌ ஆவல் உள்ளதா ? அப்படியானால் இந்த‌ பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

============

Harivarasanam Song Lyrics in Tamil with Meaning | ஹரிவராசனம் பாடல் வரிகள் விளக்கம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயன பிரபும் திவ்யதேசிகம்
திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூசணம்
தவளவாகனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரே உயிர்களின் வேந்தரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திருஉருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களைத் தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்;

அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர், இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர். வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

இந்த ஹரிவராசனம் பாடல் விளக்கம் | harivarasanam song meaning tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், ஐயப்பன் குத்து பாட்டு, வீரமணி ஐயப்பன் பாடல்கள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal, Ayyappan Tamil Song Lyrics ஹரிவராசனம் பாடல் விளக்கம் ஹரிவராசனம் பாடல் விளக்கம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Harivarasanam video song Tamil

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

6 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago