Title : Pillaiyar Suzhi Pottu seyal Thodangu Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே

தில்லை ஆனந்த கூத்தனின் மகனே

தில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்

குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்

வழியின்றி வேலனவன் திகைத்தான்

குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்

மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்

மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்

மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்

மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை

அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை

ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்

அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்

அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்

வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்

அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்

அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

‘பத்மஸ்ரீ’ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய‌ ‘பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு’ கணபதி பாடலின் வரிகள். Padmashri Seergazhi Dr. Govindarajan’s songs.

இந்த | pillaiyar suli pottu tamil songs lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள் பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment