Categories: Sivan Songs

முன்ன மேநினை பாடல் வரிகள் | munna meninai Thevaram song lyrics in tamil

முன்ன மேநினை பாடல் வரிகள் (munna meninai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோளிலி – திருக்குவளை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கோளிலி – திருக்குவளை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : வண்டமர்பூங்குழலி

முன்ன மேநினை

முன்ன மேநினை
யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன
சேவடி யேத்திலேன்
செந்நெ லார்வயல்
சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி
யேனை மறவலே. 1

விண்ணு ளார்தொழு
தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை
தீர்க்கு மருந்தினைப்
பண்ணு ளார்பயி
லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி
யேதொழு துய்ம்மினே. 2

நாளும் நம்முடை
நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்களோ
ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட்
டிருந்துநீர் நையாதே
கோளி லியரன்
பாதமே கூறுமே. 3

விழவி னோசை
ஒலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை
தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம
ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப்
பாதமே கூறுமே. 4

மூல மாகிய
மூவர்க்கு மூர்த்தியைக்
கால னாகிய
காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில்
சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன்
பாதந் தொழுமினே. 5

காற்ற னைக்கடல்
நஞ்சமு துண்டவெண்
ணீற்ற னைநிமிர்
புன்சடை யண்ணலை
ஆற்ற னையம
ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி
யேதொழு தேத்துமே. 6

வேத மாயவிண்
ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி
ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை
யுந்திருக் கோளிலி
வேத நாயகன்
பாதம் விரும்புமே. 7

நீதி யாற்றொழு
வார்கள் தலைவனை
வாதை யான
விடுக்கும் மணியினை
கோதி வண்டறை
யுந்திருக் கோளிலி
வேத நாயகன்
பாதம் விரும்புமே. 8

மாலும் நான்முக
னாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழி
யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில்
சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை
நித்தல் நினைமினே. 9

அரக்க னாய
இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி
பத்திறுத் தானவற்(கு)
இரக்க மாகிய
வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி
யேதொழு துய்ம்மினே.

திருச்சிற்றம்பலம்

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago