Categories: Sivan Songs

மண்டுகங்கை சடையிற் பாடல் வரிகள் | mantukankai cataiyir Thevaram song lyrics in tamil

மண்டுகங்கை சடையிற் பாடல் வரிகள் (mantukankai cataiyir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஇரும்பைமாகாளம் – இரும்பை தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : தொண்டைநாடு
தலம் : திருஇரும்பைமாகாளம் – இரும்பை
சுவாமி : மாகாளேச்வரர்
அம்பாள் : குயில்மொழிநாயகி

மண்டுகங்கை சடையிற்

மண்டுகங்கை சடையிற்
கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன்
றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில்
சுலாய்நின்ற மாகாளமே. 1

வேதவித்தாய் வெள்ளைநீறு
பூசி வினையாயின
கோதுவித்தா நீறெழக்
கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க்
கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர்
தொழநின்ற மாகாளமே. 2

வெந்தநீறும் எலும்பும்
அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடம்எழில்கொள்
சோலை யிரும்பைதனுள்
கந்தமாய பலவின்
கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண்
டுகள்கின்ற மாகாளமே. 3

நஞ்சுகண்டத் தடக்கி
நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த
பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந்
தழகாய மாகாளமே. 4

பூசுமாசில் பொடியான்
விடையான் பொருப்பான்மகள்
கூசஆனை யுரித்த
பெருமான் குறைவெண்மதி
ஈசனெங்கள் இறைவன்
னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண்
டணிகின்ற மாகாளமே. 5

குறைவதாய குளிர்திங்கள்
சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன்
பகவன் பரந்தசடை
இறைவன்எங்கள் பெருமான்
இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித்
தொழுகின்ற மாகாளமே. 6

பொங்குசெங்கண் ணரவும்
மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமானென
நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான்
இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
தழகாய மாகாளமே. 7

நட்டத்தோடு நரியாடு
கானத் தெரியாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ
லுருவன் னழகாகவே
இட்டமாக இருக்கும்
மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார்
பிணிதீர்க்கும் மாகாளமே. 8

அட்டகாலன் றனைவவ்
வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் இருபத்திரண்
டும்மிற வூன்றினான்
இட்டமாக விருப்பா
னவன்போ லிரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்
தெழிலாரு மாகாளமே. 9

அரவமார்த்தன் றனலங்கை
யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் மறியாமை
நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற் குயில்கள்
சேரும் மிரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர்
தொழுகின்ற மாகாளமே. 10

எந்தையெம்மா னிடமெழில்கொள்
சோலை யிரும்பைதனுள்
மந்தமாயம் பொழில்சூழ்ந்
தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு
வானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட
வல்லார்பழி போகுமே.

திருச்சிற்றம்பலம்

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago