திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள்

Thiruchendoorin Kadalorathil Sendhil Nadhan Arasangam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது……

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் முருகன் பாடல் வரிகள். பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன். Thiruchendoorin Kadalorathil Sendhil Nadhan Arasangam Murugan Devotional Song lyrics by Seerkhazhi Govindarajan.

============

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில்நாதன் அரசாங்கம்

தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்

தினமும் கூடும் தெய்வாம்சம் (திருச்செந்தூரின்)

அசுரரை வென்ற இடம் – அது

தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் – வரும்

ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் (திருச்செந்தூரின்)

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்

தலையா கடல் அலையா

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்

குமரனவன் கலையா

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று

வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று

சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று

சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று

நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு (திருச்செந்தூரின்)

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்

கந்தா முருகா வருவாய் அருள்வாய் -முருகா

இந்த | thiruchendoorin kadalorathil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment