Categories: Murugar Songs

| arupadai veedu konda thirumuruga

Arupadai Veedu Konda Thirumuruga இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அறுபடை வீடு கொண்ட திருமுருகா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா, கந்தன் கருணை முருகன் பாடல் வரிகள். பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன். Arupadai Veedu Konda Thirumuruga – Murugan Devotional Song lyrics from Kanthan Karunai Tamil Movie.

============

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா

(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்

உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு – அந்த

வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு

ஆண்டியின் கோலமுற்று மலை மீது – நீ

அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து – நல்ல

ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து

தந்தைக்கு உபதேசம் செய்த மலை – எங்கள்

தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து

தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து

கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு – கடல்

கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு – உந்தன்

குலமகளாக வரும் நினைவோடு

திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு – வண்ண

திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து – வள்ளி

தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து

காவல் புரிய என்று அமர்ந்த மலை – எங்கள்

கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு – நல்ல

காட்சி தந்து கந்தன் கருணை தந்து

வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை

தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)

இந்த | arupadai veedu konda thirumuruga பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs அறுபடை வீடு கொண்ட திருமுருகா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago